"நம்ம சுரேஷ் ரொம்ப சந்தேகப் பேர்வழிங்க." "எப்படி?" "வெள்ளை நிற வேஷ்டி வாங்கினாகூட சாயம் போகுமா போகாதா என்று பத்துமுறை கேட்டுவிட்டுத்தான் வாங்குவான்!"
எம்.டி: எதுக்கு அடுத்த வாரம் லீவு வேணும் உனக்கு ஊழியர்: எனக்கு கல்யாணம் சார்! எம்.டி.: உனக்கு எந்த முட்டாப்பய பொண்ணு கொடுக்கறான் ஊழியர்: என்ன சார் மறந்துட்டீங்களா உங்கப் பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப்போறேன்!
ஆசிரியர்: அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம். அதுக்காக இப்படி அடம்புடிக்கக் கூடாது.... தலைமை ஆசிரியர்: என்னதான் செல்றான் பையன்? ஆசிரியர்: கழித்தல் கணக்கு போடும் போது பக்கத்தில் இருக்கிற நம்பர் கிட்டயிருந்து கடன் வாங்கணும்னு சொன்னா.. நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன் வாங்கணும்னு எதிர்கேள்வி கேக்குறான்? தலைமை ஆசிரியர்:?!?!
"அவர் ஒரு போலி டாக்டர்ன்னு எப்படி சொல்ற?" "ஜலதோஷம்னு போனேன் உனக்கு எட்டாம் இடத்தில தோஷம்னு சொல்றார்."
"தலைவர் கோர்ட்ல இருந்து வந்ததும் வருத்தத்தோடு பாஸ்..பாஸ்னு சொல்றார்" "பெயில் கிடைக்கலையாம்..பெயிலுக்கு எதிர்ப்பதம் பாஸ்னு நினைச்சு சொல்றார்"
No comments:
Post a Comment