"அது என்ன டெய்லி பெப்சி பாட்டில்ல தண்ணி ஊத்துங்கன்னு பிச்சை எடுக்கும்போது சொல்லிட்டுப் போற?" "நான்தான் அதிக தெருவுல பிச்சை எடுக்கறேன்னு பெப்சி கம்பெனி என்னை 'பிராண்ட் அம்பாசடரா' அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்க சாமி!"
அம்மா: எதற்காக டா அழுதுக்கிட்டே வர்ற? சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும் பேது சுத்தி தவறி அவர் கையில் பட்டுவிட்டதும்மா.. அம்மா: இதற்கு போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சி இருப்பேன்.சிறுவன்: நானும் அதைத்தான் செய்தேன்!
"ஒரு தலைக்கு கட்டிங் செஞ்சா பத்து தலைக்கு இலவசம்னு அந்த சலூன்ல போட்டிருந்தாங்களே போய் பாத்தியா?" "பத்து தலையும் ஒரே உடம்புல இருக்கணுமாம்."
"ஒவ்வொரு மாசமும் கடைசில குடும்பச் செலவுக்கே காசு பத்தல நீ என்னடான்னா பிச்சை கேட்டு வந்துட்ட!" "எனக்கும் அதான் சாமி பிரச்சினை. அதனாலதான் வேலைய ரிசைன் பண்ணிட்டு தொழிலுக்கு வந்துட்டேன்."
"அந்த பணக்காரர் வீட்டில் மூன்று நீச்சல் குளங்கள் இருக்கின்றன. ஒன்றில் சுடு தண்ணீர் மற்றொன்றில் பச்சை தண்ணீர்..." "அப்போ மூன்றாவதில்...?" "காலியாக இருக்கும். அது தண்ணீர் என்றால் பயப்படுகிறவர்களுக்கு."
No comments:
Post a Comment