சுந்தரி: நாளுக்கு நாள் குண்டாகிட்டே போகிறாய்.. நீச்சல் அடித்தால் இளைத்து விடுவாயடி.. ராஜீ: அது எப்படி..? திமிங்கலம் கடலிலே தானே 24 மணி நேரமும் இருக்கு.. அது இளைத்தா இருக்கு?
சர்தார் அவர் மனைவியுடன் காபி ஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார். மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்? சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!!
எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உங்க பையன் அன்னைக்கு நைட்டே அந்தப்படத்தை செகண்ட் ஷோ பார்த்துடறான். சோம்பேறிப்பையன்.. அன்னைக்கு மார்னிங்க் ஷோவே பார்க்கறதுக்கு என்ன?
அடிக்கடி நீங்க செல்ஃபோன் யூஸ் பண்ணுவீங்களா? நோ டாக்டர்... காலைல 6 மணில இருந்து நைட் 12 மணி வரை மட்டும்தான் யூஸ் பண்றேன்
1வது நபர்: அவர் ரெம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற? 2வது நபர்: ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே!
No comments:
Post a Comment