Tamil News

Saturday, January 7, 2012

செய்கூலி


"உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?" "தெரியல....." "பல் டாக்டருக்கு தான்." "எப்படி?" "அவர் தான் எல்லோர் 'சொத்தை'யும் பிடுங்கறாரே."

"என் கைவசம் 7 சீரியல் இருக்கு." "நடிக்கிறீங்களா?' "இல்ல..தினமும் பாக்குறேன்"

"காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன்?" "ஏன்?" "காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே.."

"அந்தக் கல்யாணத்துல ரொம்ப 'ஈ' மொய்க்குது, ஏன்?" "ஏன்?" "அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்.."

"என்ன டாக்டர் ஆபரேஷனுக்கு ஃபீஸ் வாங்கமாட்டீங்களா..?" "ஆமாம். செய்கூலி இல்லை, ஆனா, சேதாரம் உண்டு!"

No comments:

Post a Comment