கணவன்: என் பொண்டாட்டி என்ன திட்டிட்டாடா... நண்பன்: ஏன்? கணவன்: கல்யாணமாகி இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் சமைக்கக்கூட வரலை, போய் உங்க அப்பாக்கிட்ட கத்துக்கிட்டு வாங்கனு சொல்லிட்டா...
அப்பா: புள்ளையாடா நீ! எல்லா பாடத்திலேயும் ஃபெயில், இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத! மகன்: சரி மச்சி! ஓவரா சீன் போடாம சைன் போடு.
மனைவி: ரோஸிங்கறது யாருங்க? கணவன்: ஏன் நான் தூக்கத்தில் ஏதாச்சும் உளறினேனா? அது பந்தயத்தில் நான் பணம் கட்டப்போகும் குதிரையின் பெயர், சரி எதற்கு கேட்கிறாய்? மனைவி: அப்படியா, அந்த குதிரை இன்னைக்கு மத்தியானம் உங்களுக்கு போன் பண்ணியது.
நடுவர்: (கேப்டன்களிடம்): கடைசியா உங்களை எச்சரிக்கிறேன். இரண்டு டீமும் ஒழுங்கா விளையாடணும், சும்மா தகராறு வர்றா மாதிரி நடந்துக்கக் கூடாது ஓ.கே.? கேப்டன்கள்: உங்களுக்கு வேற ஏதாவது 'கடைசி' ஆசை இருக்கா?
பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க.. பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....
No comments:
Post a Comment