ஒருவர்: காலம் கடந்து அறிவு(ஞானம்) வந்தென்ன பயன்? மற்றவர்: இழப்புகளையும் சோர்வு(நட்டம்)களையும் கணக்கிடத்தான்... மூன்றாம் ஆள்: அதுக்குத் தானண்ணே! காலம் கடந்தாலும் கணக்கு மட்டும் ஏறாதண்ணே!
"நீங்கள் எப்போதும் என்ன சோப் உபயோகிக்கிறீங்க?" "நான் எப்போதும் சோப் உபயோகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான்"
"ஏன்டி, பரீட்சைக்கு போகும் போது நிறைய பரிசு வாங்கிட்டு போற?" "எங்க டீச்சர் தான் சொன்னாங்க, பரீட்சையில் நல்ல 'Present' பண்ணனும்ன்னு."
(செல்போன் கடையில்... கடைக்காரர் கிராமவாசியிடம்) "ரீசார்ஜ் பண்ணாமலே 'லைப்' பூராவும் பேசலாம்னுதான் சொன்னோம். பேட்டரி சார்ஜ் பண்ணாமலே செல் பேசணும்ன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.."
"என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!" "பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?"
No comments:
Post a Comment