பௌலர்: அடுத்த பந்து நீங்க சிக்சர் அடிச்சாகணும்! பேட்ஸ்மென்: ஏன்? பௌலர்: நீங்க சிக்சர் அடிக்கிறீங்கன்னு நான் ஒரு கோடி ரூபாய் பந்தயம் கட்டியிருக்கேன். பேட்ஸ்மென்: இதே பந்துல நான் பவுல்டு ஆறேன்னு 2 கோடி ரூபாய் கை நீட்டி வாங்கிட்டேனே! ரசிகர்கள்: சபாஷ் சரியான போட்டி.
"அவரை எப்பவும் எல்லாரும் புகழ்ந்து பேசணும்னு நினைப்பாரு, அதுக்காகவே ஆபீசுக்கு லேட்டா தான் போவாரு.." "என்ன இது புரியவே இல்லையே.. புகழணும்னா, ஏன் ஆபீசுக்கு லேட்டா போகணும்?" "பங்க்சுவலா டைமுக்கு போனா, அவரை புகழ ஆபீசுல யாருமே இருக்கறதில்லையாமே!"
விசாரணை அதிகாரி: உங்க மனைவியோட வெளிநாட்டு வங்கிக் கணக்கில்தானே லஞ்சமா வாங்கின பணத்தைப் போட்டிருக்கீங்க கமான் சொல்லுங்க! மந்திரி: என்ன சார் இது போட்டா உங்க கிட்ட மாட்டிக்க வேண்டியிருக்கு. போடாம இருந்தா வீட்டு வாசப்படிய மிதிக்காதீங்கன்னு அவ என்னை மிரட்டறா!
கிளார்க் 1: நம்ம மேனேஜருக்கு அவர் மனைவி மேல ரொம்ப தான் மரியாதையாம் . . . கிளார்க் 2: எப்படி சொல்றீங்க? கிளார்க் 1: வீட்ல தூங்கும்போதுகூட நின்னுகிட்டே தான் தூங்கறாராம்!!
கல்லூரி ஆசிரியர்: ஏன் இன்னிக்கி இவ்வளவு லேட்டா கிளாசுக்கு வர்ற? மாணவி: என்ன ஒருத்தன் ஃபாலோ பண்ணிட்டே வந்தான் சார்! ஆசிரியர்: அதனால என்ன? மாணவி: அவன் ரொம்ப ரொம்ப மெதுவா நடந்து வந்தான் சார்!
No comments:
Post a Comment