Tamil News

Saturday, January 7, 2012

மனைவி................


மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார். நான் எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்! கணவன்: வேறு ஒரு டாக்டரிடம்!

கணவன்: நமக்கு கல்யாணமாகி 5 வருஷத்தில் ஒரு விஷயத்திற்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே ஒரு எதிர் கருத்து சொல்லிடுவ.. மனைவி: நீங்க சொல்றது தப்புங்க.. நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு..

கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்! மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது.. கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!

மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை. கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே.. மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்.

தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்... மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!

No comments:

Post a Comment