Tamil News

Saturday, January 7, 2012

கடி ஜோக்ஸ்


"காலம் எப்படி மாறிப்போச்சு பாத்தியா.." "என்ன சொல்ற?" "செய்யற ஊழலைக்கூட மரியாதையா சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..2ஜி..3ஜி ன்னு"

"தலைவர் ஏன் ரொம்பக் கோபமா இருக்கார்.." "யாரோ அவரை 'ராஜா'போல வாழணும்னு வாழ்த்திட்டுப் போனாராம்"

"சார், ஆறு வருஷத்துல நீங்க போட்ட பணம் இரட்டிப்பாகும்னு சொன்னீங்களே.. என்ன ஆச்சு?" "இரட்டிப்பாகும்னு தானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே!"

"என் மகன் ஜெயில்ல இருக்கான்.." "ஏன்?" "ஒரு மொழிப் பிரச்சினைல மாட்டிக்கிட்டான். அதான்." "என்ன மொழிப் பிரச்சினை?" "தேன் மொழிய கெடுத்துட்டான்."

"டிக்கெட் எல்லாம் முடிஞ்சு போச்சு எல்லாம் போங்க... போங்கன்னு சொல்றோம்ல!" "ஏன் என்ன ஆச்சு ஃபுல் ஆயிடுச்சா?" "நீங்க வேற மேட்சே அங்க முடிஞ்சு போச்சு!"

No comments:

Post a Comment