காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே?! காதலி: ஆமாம் அன்பே.. காதலன்: அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..? காதலி: மாட்டேன்.. என்னுடையது இறவா காதல் அன்பே..
ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம் "எங்கப்பா ரொம்ப பயந்தான்கொள்ளிடா" "எப்படிடா சொல்லுறே?" "பின்னே என்னடா ரோடை க்ராஸ் பண்ணும் பொழுது என் கையை கெட்டியா பிடிச்சிக்கிறார்டா..."
ஆசிரியர்: நேற்று ஏன்டா ஸ்கூலுக்கு வரலை? இனிமேல் முதல் நாளே லீவு சொல்லிடணும். மாணவன்: சரி சார். நாளைக்கு எனக்கு வயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்!
1வது நபர்: அவர் ரொம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற? 2வது நபர்: ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே!
நாதஸ்வர வித்வான்: (சபா காரியதரிசியிடம்) அடடா.. நீங்க சொல்ற தேதிக்கு நாதஸ்வரக் கச்சேரிக்கு ஒத்து வராதே சபா காரியதரிசி: ஒத்து வரலேன்னா..பரவாயில்லை.. நீங்க வந்தா போதும்
No comments:
Post a Comment