இன்ஸ்பெக்டர்: கண்டெய்னர்ல ரேஷன் அரிசி தான் கடத்திட்டு வறாங்கன்னு எப்படிய்யா அவ்ளோ கரெக்டா செல்ற.. ஏட்டு: அவ்ளோ தூரத்துல வரும் போதே ரொம்ப மோசமான ஒரு நாத்தம் அடிக்கிதே அத வச்சித்தான்.
எதையோ பத்தி ரெம்ப ஆழ்ந்து சிந்திச்சிக்கிட்டிருக்கீங்க போல... எதைப் பற்றி சிந்திக்கிறதுன்னுதான் சிந்திச்சிக்கிட்டிருக்கேன்! வேற என்ன?
கோபு: நான் ஆபீசில் நல்ல பெயர் எடுத்திருப்பதற்கு என் மனைவிதான் காரணம். பாபு: எப்படி? கோபு: வீட்டுக்கு பேற டைம் வந்ததும் என் மேஜை மீதிருக்கும் அவளது பேட்டோவை பார்ப்பேன்.. அவ்வளவுதான் அப்படியே நிறைய வேலை செய்து முடித்து விடுவேன்.
மெகா சீரியல் தயாரிப்பாளர்: என்ன சார் இது 1 எபிசோடுக்கு 2 கோடி ரூபாய் பட்ஜெட் போட்ருக்கீங்க..? டைரக்டர்: அப்படியே எல்லா கேரக்டரையும் அழ விட்டாத்தான் சார் சீரியல் லேடீஸ் மத்தியில ஹிட் ஆகும், அதனால்தான் கிளிசரின் மட்டும் ஒரு குவிண்டால் செலவாகும் சார்!
"என்ன பிரச்சினையாயிருந்தாலும் உங்க பாஸ் ஐ Don't Mind அப்படீன்னு சொல்றாரே, பரவால்லியே!" "மண்ணாங்கட்டி, அவருக்கு மூளையில்லங்கறதத்தான் இந்த லட்சணத்தில் சொல்றாரு."
No comments:
Post a Comment