Tamil News

Saturday, January 7, 2012

டிராபிக் போலீ


டிராபிக் போலீஸ்: ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே? நபர்: எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?

அவர்: எங்கிட்ட எவ்ளோ பெரிய்ய்ய நிலம் இருக்கிறது தெரியுமா? காலையில் கிழக்கு பக்க எல்லையிலிருந்து காரில் கிளம்பினால் மாலையாகிவிடும் மேற்கு பக்க எல்லையை அடைய! நண்பர்: என்னிடம்கூட கொஞ்ச நாளைக்கு முன்னாடி அது மாதிரி ஒரு கார் இருந்தது!

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு தூக்கிட்டீங்க? ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க 'டிபன் ரெடியா?'ன்னு கேட்டா 'நேத்தே ரெடி'ங்கறான்!

பயணி: தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க. கண்டக்டர்: இன்னொரு டிக்கெட் யாருக்கு? பயணி: ரெண்டுமே எனக்குத்தான். ஒண்ணு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே. கண்டக்டர்: அதுவும் தொலைஞ்சி போச்சுனா? பயணி: ஒண்ணும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.

அண்ணன்: ரூமை மூடிக்கிட்டு ஏன் மருந்து சாப்பிட்டாய்? தம்பி: டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.

No comments:

Post a Comment