Tamil News

Saturday, January 7, 2012

சந்தேகப் பேர்வழி


"ஏங்க டூ வீலர இவ்ளோ வேகமா ஓட்டிக்கிட்டு வர்றீங்க.. அந்த தெரு திருப்பத்துல உங்க மனைவி விழுந்துட்டாங்க பாருங்க.." "ஓ.. அப்படியா? நான் தான் என் காது செவிடாகி விட்டதுன்னு நெனச்சிக்கிட்டேன்."

"என்ன இந்த தடவை இங்கிலாந்து பேட்டிங் செய்ய மாட்டாங்களாமா?" "இங்கிலாந்திலேயே இந்தியாவுக்கு எதிரா நிறைய ரன் அடிச்சாங்களாம் அதை முதல்ல இந்தியா திருப்பி அடிக்கட்டும்னு சொல்லிட்டாங்களாம்."

"நம்ம சுரேஷ் ரொம்ப சந்தேகப் பேர்வழிங்க." "எப்படி?" "வெள்ளை நிற வேஷ்டி வாங்கினாகூட சாயம் போகுமா போகாதா என்று பத்துமுறை கேட்டுவிட்டுத்தான் வாங்குவான்!"

"நண்பா நாளை எனக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்யப் போகிறார்கள்... அதற்கு உன் மூளையை தருவாயா?" "ஏன் என்றால் உபயோகப்படுத்தாமல் ப்ரெஸ் -ஆ இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்."

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்? மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்பவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.

No comments:

Post a Comment