"எனக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும் வாங்கியிருக்கீங்களே..ஏன்?" "இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும்.. ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான்!"
"உனது கடைசி ஆசை என்ன?" "சரியாக வாதாடாமல், எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்ததற்குக் காரணமான எனது வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடவேண்டும்!"
"ஆபரேஷன் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் பீஸ் சரி டாக்டர், அதென்ன ப்ளஸ் முந்நூறு?" "அது, பாடியை வீட்டுக்கு எடுத்துப் போக ஆம்புலன்ஸ் வாடகை!"
"உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா..?" "கண்டிப்பா இருக்கே." "அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.' "அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?" "அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே.."
பார்பர்: சார், கொஞ்சம் முகத்தை திருப்ப முடியுமா? நபர்: அதுக்குள்ளே இந்த பக்கம் முடிஞ்சுதா? பார்பர்: இல்லை சார். எனக்கு இரத்தம்னா அலர்ஜி.
No comments:
Post a Comment