"பாயசம் தான் ரெடியாயிடுச்சே, அப்புறம் ஏன், பாயசம் 1 தரம், பாயசம் 2 தரம், பாயசம் 3 தரம்ன்னு கத்தர?" "பாயசம் இறக்கின உடனே ஏலம் போட சொன்னாங்க, அதான்."
டாக்டர்: தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க. நோயாளி: அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?
"ஒரு பையன் தன் அப்பவின் பெயரை பேப்பர்ல எழுதி பிரிட்ஜ்ல வெச்சான், ஏன் தெரியுமா?" "அவன் அப்பா சொன்னாராம், அவர் பெயரை கெடாம பார்த்துக்க சொல்லி."
"நம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...!" "எப்படி?" "நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே!"
"நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.. அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்" "என்ன சொல்றீங்க?" "இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே.."
No comments:
Post a Comment