Tamil News

Saturday, January 7, 2012

மனைவி................


மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார். நான் எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்! கணவன்: வேறு ஒரு டாக்டரிடம்!

கணவன்: நமக்கு கல்யாணமாகி 5 வருஷத்தில் ஒரு விஷயத்திற்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே ஒரு எதிர் கருத்து சொல்லிடுவ.. மனைவி: நீங்க சொல்றது தப்புங்க.. நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு..

கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்! மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது.. கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!

மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை. கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே.. மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்.

தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்... மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!

நீதிபதி



நீதிபதி: ஏம்பா. இவ்வளவு பெரிய திருட்ட நீ மட்டும் தனியாவா செஞ்ச? குற்றவாளி: ஆமா ஐயா. இப்ப காலம் கெட்டுக் கிடக்குது. யாரையும் நம்ப முடியல...

"தம்பி இந்த லெட்டரை உங்க அக்காகிட்ட கொடு" "அதுக்கு வேற ஆளை பாரு" "ஏன்டா, உங்க அக்கா நல்லாத்தானே இருக்கா!"

"எந்த ஐட்டம் கேட்டாலும் இல்லைன்னு சொல்றே, அப்புறம் என்ன எழவுக்கு மெனுகார்டை கொடுத்தே?" "ஒவ்வொரு ஐட்டத்தோட பேரையும் சொல்லி, இல்லைன்னு சொன்னா எனக்கு வாய் வலிக்குமே சார்."

"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?" "நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?" "சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

ஹோட்டல்




"ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!" "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."

காதலி: நம்ம காதல் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு.... காதலன்: அய்யய்யோ.. அப்புறம் என்ன ஆச்சு..? காதலி: பையன் வீட்டு வேலையெல்லாம் நம்ம அப்பா மாதிரியே நல்லா செய்வாரும்மான்னு சொல்லி சமாளிச்சிட்டேன்....

"இந்த ஹோட்டல் காஸ்ட்லி ஹோட்டல்னு எப்பிடி சொல்றே?" "காசில்லாமல் ஒரு தோசை சாப்பிட்டால் பத்தி கிலோ அரிசி மாவாட்டி தரணுமாம்."

"எங்க ஊரு போலீஸ், திருட்டு போன மறுநாளே திருடனை பிடிச்சுடுவாங்க..." "இதென்ன பிரமாதம், எங்க ஊர் போலீஸூக்கு திருட்டு போறதுக்கு முதல் நாளே தெரிஞ்சுடும்"

ஒருவர்: நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன் மற்றவர்: அப்புறம்? ஒருவர்: களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்..

பந்தயக்குதிரை



கணவன்: என் பொண்டாட்டி என்ன திட்டிட்டாடா... நண்பன்: ஏன்? கணவன்: கல்யாணமாகி இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் சமைக்கக்கூட வரலை, போய் உங்க அப்பாக்கிட்ட கத்துக்கிட்டு வாங்கனு சொல்லிட்டா...

அப்பா: புள்ளையாடா நீ! எல்லா பாடத்திலேயும் ஃபெயில், இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத! மகன்: சரி மச்சி! ஓவரா சீன் போடாம சைன் போடு.

மனைவி: ரோஸிங்கறது யாருங்க? கணவன்: ஏன் நான் தூக்கத்தில் ஏதாச்சும் உளறினேனா? அது பந்தயத்தில் நான் பணம் கட்டப்போகும் குதிரையின் பெயர், சரி எதற்கு கேட்கிறாய்? மனைவி: அப்படியா, அந்த குதிரை இன்னைக்கு மத்தியானம் உங்களுக்கு போன் பண்ணியது.

நடுவர்: (கேப்டன்களிடம்): கடைசியா உங்களை எச்சரிக்கிறேன். இரண்டு டீமும் ஒழுங்கா விளையாடணும், சும்மா தகராறு வர்றா மாதிரி நடந்துக்கக் கூடாது ஓ.கே.? கேப்டன்கள்: உங்களுக்கு வேற ஏதாவது 'கடைசி' ஆசை இருக்கா?

பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க.. பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....

அலர்ஜி



"எனக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும் வாங்கியிருக்கீங்களே..ஏன்?" "இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும்.. ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான்!"

"உனது கடைசி ஆசை என்ன?" "சரியாக வாதாடாமல், எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்ததற்குக் காரணமான எனது வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடவேண்டும்!"

"ஆபரேஷன் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் பீஸ் சரி டாக்டர், அதென்ன ப்ளஸ் முந்நூறு?" "அது, பாடியை வீட்டுக்கு எடுத்துப் போக ஆம்புலன்ஸ் வாடகை!"

"உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா..?" "கண்டிப்பா இருக்கே." "அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.' "அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?" "அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே.."

பார்பர்: சார், கொஞ்சம் முகத்தை திருப்ப முடியுமா? நபர்: அதுக்குள்ளே இந்த பக்கம் முடிஞ்சுதா? பார்பர்: இல்லை சார். எனக்கு இரத்தம்னா அலர்ஜி.

குட்நைட்


"நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?" "போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்."

நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க? நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

"மழை வர்றமாதிரி இருக்கு! மொட்டை மாடில காயற துணியையெல்லாம் எடுத்துட்டு வாங்க..ஓடுங்க!" "வந்ததும் போறேனேடி......" "யாரு வந்ததும்?.....துணி எடுக்க பக்கத்து வூட்டுக்குட்டி அவ மாடிக்கு வந்ததுமா?"

நர்ஸ்: ஆபரேஷன் தியேட்டர்ல வந்துகூட எதுக்கு டாக்டர் என்னை சில்மிஷம் பண்றீங்க? டாக்டர்: புரியாமல் பேசாதே.. பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து வேலை செய்யிதான்னு உன் மூலமா டெஸ்ட் பண்ணினேன், அவ்வளவுதான்.

உமா: ஆபீசுக்கு போகும்போது உன் கணவர் 'குட்நைட்'ன்னு சொல்லிட்டுப் போறாரே...எதுக்கு? ரமா: அங்க போய் தூங்கத்தானே போறார்.

அடுத்த பந்து நீங்க சிக்சர் அடிச்சாகணும்


பௌலர்: அடுத்த பந்து நீங்க சிக்சர் அடிச்சாகணும்! பேட்ஸ்மென்: ஏன்? பௌலர்: நீங்க சிக்சர் அடிக்கிறீங்கன்னு நான் ஒரு கோடி ரூபாய் பந்தயம் கட்டியிருக்கேன். பேட்ஸ்மென்: இதே பந்துல நான் பவுல்டு ஆறேன்னு 2 கோடி ரூபாய் கை நீட்டி வாங்கிட்டேனே! ரசிகர்கள்: சபாஷ் சரியான போட்டி.

"அவரை எப்பவும் எல்லாரும் புகழ்ந்து பேசணும்னு நினைப்பாரு, அதுக்காகவே ஆபீசுக்கு லேட்டா தான் போவாரு.." "என்ன இது புரியவே இல்லையே.. புகழணும்னா, ஏன் ஆபீசுக்கு லேட்டா போகணும்?" "பங்க்சுவலா டைமுக்கு போனா, அவரை புகழ ஆபீசுல யாருமே இருக்கறதில்லையாமே!"

விசாரணை அதிகாரி: உங்க மனைவியோட வெளிநாட்டு வங்கிக் கணக்கில்தானே லஞ்சமா வாங்கின பணத்தைப் போட்டிருக்கீங்க கமான் சொல்லுங்க! மந்திரி: என்ன சார் இது போட்டா உங்க கிட்ட மாட்டிக்க வேண்டியிருக்கு. போடாம இருந்தா வீட்டு வாசப்படிய மிதிக்காதீங்கன்னு அவ என்னை மிரட்டறா!

கிளார்க் 1: நம்ம மேனேஜருக்கு அவர் மனைவி மேல ரொம்ப தான் மரியாதையாம் . . . கிளார்க் 2: எப்படி சொல்றீங்க? கிளார்க் 1: வீட்ல தூங்கும்போதுகூட நின்னுகிட்டே தான் தூங்கறாராம்!!

கல்லூரி ஆசிரியர்: ஏன் இன்னிக்கி இவ்வளவு லேட்டா கிளாசுக்கு வர்ற? மாணவி: என்ன ஒருத்தன் ஃபாலோ பண்ணிட்டே வந்தான் சார்! ஆசிரியர்: அதனால என்ன? மாணவி: அவன் ரொம்ப ரொம்ப மெதுவா நடந்து வந்தான் சார்!